பஞ்சாப்பை பஞ்சராக்கிய ராஜஸ்தான் - 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

 
RR

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங் அகர்வால் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிகர் தவான் 12 ரன்களில் வெளியேறிய நிலையில், அடுத்ததாக வந்த பானுகா ராஜபக்சே 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜானி பேர்ஸ்டோ அரைசதம் விளாசினார். இந்நிலையில் கேப்டன் மயங் அகர்வால் 15 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக பேர்ஸ்டோவும் 56 ரன்களில் வெளியேறினார். அடுத்தாக வந்த ஜித்தேஷ் சர்மா மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் அதிரடி காட்டினர். லிவிங்ஸ்டன் 22 ரன்களில் வெளியேறிய நிலையில், ஜித்தேஷ் சர்மா 18 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. 

PBKS

இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. ஜாஸ் பட்லர் 30 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்களில் அவுட்டானார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஷ்வி ஜேஸ்வால் 68 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதேபோல் தேவ்தத் படிக்கல் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய சிம்ரன் ஹெட்மயர் 16 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.