டெல்லியை வீழ்த்தி லக்னோ 7-வது வெற்றி

 
lsg

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மும்பை வான்கடே மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டி காக் 23 ரன்களில் அவுட்டாகிய நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் அணியை சரிவில் இருந்து மீட்டார்.  தீபக் ஹூடா 52 ரன்களில் வெளியேறினார். இந்த போட்டியிலும் சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட கேப்டன் கே.எல்.ராகுல் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 17 ரன்களும், குர்ணல் பாண்டிய 9 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. 

dc phant

இதனையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணி தொடக்கம் முதலே சொதப்பியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 5 ரன்களிலும், டேவிட் வார்னர் 3 ரன்களிலும் வெளியேறினர். அடுத்ததாக வந்த மிட்செல் மார்ஷ் 37 ரன்கள் சேர்த்து வெளியேறிய நிலையில், அடுத்ததாக வந்த லலித் யாதவ் 3 ரன்களில் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ரிஷப் பந்த் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார்.  ராவ்மன் பால் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி வரை போராடிய அக்‌ஷர் பட்டேல் 42 ரன்கள் எடுத்தார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.