ராகுல் அதிரடி! - டெல்லி அணிக்கு 196 ரன்கள் இலக்கு

 
KL Rahul

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி -- ரன்கள் குவித்துள்ளது. 

மும்பை வான்கடே மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Deepak hooda

இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டி காக் 23 ரன்களில் அவுட்டாகிய நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் அணியை சரிவில் இருந்து மீட்டார். கே.எல்.ராகுல் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் நல்லதொரு கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவருமே அரைசதம் கடந்த நிலையில், தீபக் ஹூடா 52 ரன்களில் வெளியேறினார். இந்த போட்டியிலும் சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட கேப்டன் கே.எல்.ராகுல் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 17 ரன்களும், குர்ணல் பாண்டிய 9 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங்கை தொடங்கி விளையாடி வருகிறது.