திவாட்டியா, மில்லர் மரண அடி - பெங்களூருவை வீழ்த்தி குஜராத் வெற்றி

 
GT

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் கார்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், பாப் டுபிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்திறன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூபிளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து பெங்களூரு அணி முதலாவதாக பேட்டிங்கை தொடங்கியது. 

VIRAT RCB

இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் பாப் டுபிளெசிஸ் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்நிலையில், ராஜத் படித்தார் உடன் கூட்டணி அமைத்த விராட் கோலி அணியை சரிவில் இருந்து மீட்டார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். ராஜத் படித்தார் 52 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டாகி வெளியேறினார். அடுத்ததாக விராட் கோலியும் 58 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய கிலென் மேக்ஸ்வெல் 33 ரன்கள் சேர்த்து அவுட்டாகிய நிலையில், தினேஷ் கார்திக் வெறும் 2 ரன்களில் நடையை கட்டினார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய லாம்ரார் 8 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார்.  இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது. 

gt

இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. விரித்திமான் சஹா 29 ரன்களிலும், சுபான் கில் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சாய் சுதர்சன் 20 ரன்களில் அவுட்டானார். தினேஷ் கார்த்திக் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்த நிலையில், டேவிட் மில்லர் 39 ரன்களிலும், ராகுல் திவேத்தியா 43 ரன்களும் சேர்த்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து குஜராத் அணி வெற்றி பெற்றது.