ருத்ரதாண்டவம் ஆடிய ருத்துராஜ் - சென்னை அணிக்கு 3-வது வெற்றி

 
csk

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் ஐதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது. 

புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து சென்னை அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. 

ruturaj conway

சென்னையில் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே ஆகியோர் களமிறாங்கினர். இருவரும் ஐதராபாத் அணியின் பந்துவிச்சை துவம்சம் செய்தனர். நான்கு பக்கமும் பந்துவீச்சை சிதறவிட்டனர். மேலும் இருவருமே அரைசதம் அடித்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் 99 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்ததாக வந்த தோனி 8 ரன்களில் வெளியேறினார். இதேபோல் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்பட்த்திய டேவன் கான்வே 85 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் சேர்த்தது. 

Mugesh

இதனையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும், பின்னர் சொதப்பியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 39 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக வந்த ராகுல் திரிபாதி வந்த வேகத்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ஆடம் மார்க்ரன் 17 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் கேன் வில்லியம்சன் 47 ரன்களில் வெளியேறினார். இறுதி வரை போராடிய நிக்கோலஸ் பூரான் 64 ரன்கள் எடுத்தார். இறுதியாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை பதிவு செய்தது. அதிகபட்சமாக முகேஷ் சௌத்ரி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.