வேற லெவல் பவுலிங் - டெல்லியை தெறிக்கவிட்ட சென்னை

 
csk new

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியது. 

மும்பையில் உள்ள டி.ஒய். பட்டேல் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 110 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடி வந்த ருத்துராஜ் கெய்க்வார் 41 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இந்நிலையில் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவன் கான்வே அரைசதம் கடந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 87 ரன்களில் வெளியேறினார். அடுத்த வந்த சிவம் தூபே 32 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ராயுடு 5 ரன்களிலும், மோயின் அலில் 9 ரன்களிலும் வெளியேறினார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய கேப்டன் எம்.எஸ். தோனி 8 பந்துகளில் 21 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. 

csk

இதனையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கம் முதலே தடுமாறியது. ஷிரிகர் பரத் 8 ரன்களில் வெளியேறினார். டேவிட் வார்னர் 19 ரன்களில் வெளியேறினார். மிட்செல் மார்ஷ் 25 ரன்களிலும், கேப்டன் ரிஷப் பந்த் 25 ரன்களிலும் வெளியேறினார். ராவ்மன் பவுல் 3 ரன்களிலும், ரிப்பா பட்டேல் 6 ரன்களிலும், அக்‌ஷர் பட்டேல் 1 ரன்களிலும் வெளியேறினர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஷர்தூல் தாகூர் 24 ரன்கள் சேர்த்து அவுட்டாகினார். இவ்வாறு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த டெல்லி அணி 17.4 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்திற்கு சென்றது.