குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு 170 ரன்கள் குவிப்பு

 
VIRAT RCB

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 170 ரன்கள் குவித்துள்ளது. 


மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் கார்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், பாப் டுபிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூபிளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து பெங்களூரு அணி முதலாவதாக பேட்டிங்கை தொடங்கியது. 

PADITHAR

இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் பாப் டுபிளெசிஸ் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்நிலையில், ராஜத் படித்தார் உடன் கூட்டணி அமைத்த விராட் கோலி அணியை சரிவில் இருந்து மீட்டார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். ராஜத் படித்தார் 52 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டாகி வெளியேறினார். அடுத்ததாக விராட் கோலியும் 58 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய கிலென் மேக்ஸ்வெல் 33 ரன்கள் சேர்த்து அவுட்டாகிய நிலையில், தினேஷ் கார்திக் வெறும் 2 ரன்களில் நடையை கட்டினார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய லாம்ரார் 8 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார். சபாஷ் அகமது 2 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது.

இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி பேட்டிங்கை தொடங்கி விளையாடி வருகிறது.