டி20 தொடரிலும் ஆதிக்கம் செலுத்துமா இந்தியா ? - இன்று முதல் டி20 போட்டி

 
ind vs eng

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்றிரவு நடைபெறுகிறது. 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் மூன்றிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது. இந்நிலையில், முதல் டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு ட்ரினிடாட் பகுதியில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் நடைபெறுகிறது. ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி அதே உத்வேகத்தில் இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஒருநாள் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கிந்திய தீவுகள் அணி தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்திய அணியின் உத்தேச பட்டியல்: ரோகித் சர்மா, ரிஷப் பந்த், தீபக் ஹூடா அல்லது ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பாட்டேல், ஷர்ஷால் பட்டேல், ஆர் அஸ்வின் அல்லது குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.