பேட்டிங்கில் திணறும் இந்தியா - முக்கிய வீரர்கள் ஏமாற்றம்

 
ind vs wi

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி பேட்டிங்கில் திணறி வருகிறது. 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் மூன்றிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது. இந்த நிலையில், முதல் டி20 போட்டி ட்ரினிடாட் பகுதியில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கி விளையாடி வரும் நிலையில், 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.  

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் வந்த வேகத்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினார். 7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்துள்ளது.