வெற்றியுடன் தொடங்குமா இந்தியா ? - இன்று முதல் ஒருநாள் போட்டி

 
india

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. 

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி நேற்று காலை டிரிண்டாட் விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த தொடரில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் கேப்டனாக ஷிகர் தவான் நியமிகப்பட்டுள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 7 மணிக்கு டிரிண்டாட் பகுதியில் உள்ள குயின்ஸ் பார்க்  ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய அணி விபரம்: ஷிகர் தவான்(கேப்டன்), ரவிந்தர ஜடேஜா(துணை கேப்டன் ), ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான்(விக்கெட் கீப்பர்) , சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்) , ஷர்துல் தாக்கூர், யுவேந்திர சஹால், அக்சர் படேல், அவேஷ் கான், பிரஷித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.