ஒருநாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்துமா இந்தியா? - இன்று முதல் ஒருநாள் போட்டி

 
ind vs zim

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவதாக டி20 தொடர் நடைபெற்ற நிலையில் இதில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. டி20 போட்டி தொடரைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடக்கிறது. ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு கவுகாத்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே டி20 தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் நாளை களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் டி20 தொடரை இழந்த இலங்கை அணி ஒருநாள் தொடரை கைப்பற்ற தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளது குறிப்பிடதக்கது.