தொடரை கைப்பற்றுமா இந்தியா? - இன்று 4வது டி20 போட்டி

 
ind vs eng

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. 

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற 3 போட்டிகளில் 2ல் இந்தியாவும், ஒன்றில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், 4வது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில் நகரில் இன்று நடக்கிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பதில்டி கொடுக்கும் வகையில் மேற்கிந்திய தீவுகள் அணி முனைப்பு காட்டி வருகிறது. 

கடந்த போட்டியில் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முழுவதுமாக குணமடைந்துவிட்டார் இதனால் அவர் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என கூறப்படுகிறது. தொடரை வெல்ல இந்திய அணியும் ,தோல்விக்கு பதிலடி கொடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணியும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.