நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி

 
IndvsNZ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று இந்தூரில் நடைபெற்றது.

Image

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்பன் கில் ஆகியோர் அபாரமாக ஆடி சதம் அடித்தனர்.50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்களை எடுத்தது.

386 என்ற இமால இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் பின் ஆலன் டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் டெவன் கான்வே அபாரமாக அடி சதம் அடித்தார். ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நியூசிலாந்தின் பக்கம் சென்ற நிலையில் , இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் சர்குல் தாகூர் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார்.டெவன் கான்வே 138 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்து வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.41.2 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 295 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்து அணியை வைட் வாஷ் செய்தது. இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் போட்டி அணிகள் தர வரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை ஒயிட் வாஷ் செய்ததை தொடர்ந்து ஐசிசி தரவரிசையில் இந்தியா 114 ரேட்டிங் உடன் முதலிடம் பிடித்தது.