2022-ல் சிறந்த வீரராக சூர்யகுமார் யாதவ் தேர்வு

 
suryakumar yadav

ஐசிசியின் 2022 ஆம் ஆண்டில் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக இந்திய மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

suryakumar yadav: Not just on field, Suryakumar Yadav hits it out of the  park in endorsements too - The Economic Times

சூர்யா கடந்த ஆண்டு முழுவதும் அற்புதமாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் டி20 போட்டிகளில் ஏராளமான சாதனைகளை முறியடித்தார்.'SKY' என்று பிரபலமாக அறியப்படும், 32 வயதான அவர் கடந்த ஆண்டு 31 டி20 போட்டிகளில் 46,56 சராசரி மற்றும் 187.43 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,164 ரன்கள் குவித்துள்ளார். அவர் சாம் கரன், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் முகமது ரிஸ்வான் மற்றும் ஜிம்பாப்வேயின் பேட்டிங் ஆல்-ரவுண்டர் சிக்கந்தர் ராசா போன்றவர்களை வீழ்த்தி மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற பட்டத்தை வென்றார்.

2022ஆம் ஆண்டில் சூர்யகுமார் யாதவ் 68 சிக்ஸர்களை அடித்துள்ளார், இரண்டு சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்களை அடித்து, ஆண்டு முழுவதும் தனது அணிக்கு முக்கிய பேட்டராக இந்திய வீரர் இருந்தார். இதேபோல் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் போது சூர்யா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், ஆறு இன்னிங்ஸ்களில் மூன்று அரைசதங்களைப் பதிவு செய்தார். சராசரியாக 60 ரன்களை எடுத்தார். குறிப்பிடத்தக்க வகையில், அவரது ஸ்ட்ரைக்-ரேட் மீண்டும் 189.68 ஆக இருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்கனவே ஒரு சதத்தை பதிவு செய்த நிலையில், சூர்யா 890 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்று, டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.