டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் ஹாரி புரூக் - ஐசிசி அறிவிப்பு

 
Harry Brooke

டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக்கை ஐசிசி தேர்வு செய்துள்ளது. 

ஒவ்வொரு மாதமும் சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கணைகளை தேர்வு செய்து ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கணைக்கான விருதை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பட் மாதத்திறகான சிறந்த வீரர் விருதுக்கு இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த தொடரில் ஹாரி புரூக் தனது அசத்தலான ஆட்டத்தால் 3 சதம் மற்றும் 1 அரைசதம் குவித்து அசத்தினார். ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ஹாரி புரூக்கை ஐதராபாத் அணி 13.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடதக்கது. 

Ashle Cartnor


 
இதேபோல் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான விருதை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் கைப்பற்றி உள்ளார். சமீப காலமாக ஆஸ்திரேலிய அணியில் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் ஆஷ்லே கார்ட்னர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.