விராட் கோலிக்கு தங்களது ஜெர்சியை பரிசளித்த ஹாங்காங் அணி

 
virat hong kong

நேற்றைய போட்டிக்கு பின்னர் இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு ஹாங்காங் அணி வீரர்கள் தங்களது அணியின் ஜெர்சியை பரிசளித்துள்ளனர்.

ஆசியக் கோப்பை தொடரின் 4வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக ஆட முயன்ற ரோகித் சர்மா 13 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்த ஆட்டமிழந்தார். மறுபுறம் தடுமாற்றத்துடன் ஆடி வந்த கே.எல் ராகுல் 39 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு களம் இறங்கிய விராட் கோலி நிதானமாக ஆடி அரை சதம் அடித்தார். மறுபுறம் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் சூறாவளி போல ஆடி 26 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 68 ரன்கள் குறித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். மறுபுறம் விராட் கோலி 59 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.கலக்கலாக ஆடிய இந்த ஜோடி 42 பந்துகளில் 98 ரன்களை குவித்தது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை சேர்த்தது.

suryakumar yadav

இதனையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் பாபர் ஹெயாட் 41 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 26 பந்துகளில் 68 ரன்கள் சேர்ந்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

hong kong

இந்த நிலையில் போட்டி முடிந்ததும் விராட் கோலிக்கு ஹாங்காங் அணி வீரர்கள் தங்களது அணியின் ஜெர்சியை பரிசளித்துள்ளனர்.அந்த ஜெர்சியில் ஒரு தலைமுறைக்கே ஊக்கமாக இருந்ததற்கு நன்றி. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் என எழுதி பரிசாக அளித்துள்ளனர். இதனை விராட் கோலி, நன்றி ஹாங்காங் இது மிகவும் இனிமையானது என தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.