புதிய ஜெர்சியில் கலக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் - புகைப்படங்கள் இதோ!

 
team india

டி20 உலக கோப்பை தொடரை முன்னிட்டு பிசிசிஐ இந்திய டி20 அணிக்கு புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. 

டி20 உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுடன் டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரானது வருகிற 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 20-ம் தேதி மொஹாலியில் முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில்,  இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய டி20 ஜெர்சியை பிசிசிஐ இன்று அறிமுகம் செய்துள்ளது.


மொஹாலியில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் இந்திய அணி இந்த புதிய ஜெர்சியுடன் களமிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கை புளு நிறத்தில் தோற்றமளிக்கும் இந்த புதிய ஜெர்சியை இந்திய வீரர் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கவுர், ஷபாலி வர்மா ஆகியோர் அணிந்து இருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில்,  அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்க்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.