டி20 உலக கோப்பை - டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

 
eng

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

8வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் முடிவில் இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களி பிடித்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதேபோல் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நிலையில், அதில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

eng vs pak

இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத இருப்பது இது 3-வது முறையாகும். இதற்கு முன் 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் லீக் சுற்றில், பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. அதே சமயம் அந்த ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான்தான் வென்றது.  அடுத்து 2010-ல் வெஸ்ட்இண்டீசில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை தொடரின்போது இவ்விரு அணிகளும் 'சூப்பர் 8' சுற்றில் சந்தித்தன. இதில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. மேலும் அந்த ஆண்டு உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. இந்நிலையில், இன்றைய போட்டியில் யார் கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்ற பெரும் எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில், கோப்பைக்கான இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.