டி20 உலக கோப்பை 2வது அரையிறுதி போட்டி - இந்திய அணி பேட்டிங்

 
IND

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

8வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.  சூப்பர் 12 சுற்றில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. அதாவது, சூப்பர்12 சுற்றின் முடிவில் குரூப்1-ல் முதல் இரு இடங்களை பிடித்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப்2-ல் டாப்-2 இடங்களை பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான்  ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நேற்று நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் நடைபெறவுள்ள 2-வது அரைஇறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்தும் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தார். 

eng

இந்திய அணி விவரம் : கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

இங்கிலாந்து அணி விவரம் : ஜோஸ் பட்லர்(கேப்டன்) , அலெக்ஸ் ஹேல்ஸ், பிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித் உள்ளிட்டோர் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.