பட்டய கிளப்பிய பட்லர் - நியூசிலாந்து அணிக்கு 180 ரன்கள் இலக்கு

 
ENG vs NZ

டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 179 ரன்கள் குவித்துள்ளது. 

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில்  ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகின்றன. குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிக்குள் நுழையும். 

இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் குரூப்1-ல் அங்கம் வகிக்கும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.இப்போட்டியில் டாஸ் வென்ற  இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,அலெக்ஸ் ஹாலெஸ் களமிறங்கினர். தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய அலெக்ஸ் ஹாலெஸ் 52 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பின்னர் ஜோஸ் பட்லர் அதிரடியை தொடர்ந்தார்.  சிறப்பாக விளையாடிய பட்லர் 47 பந்துகளில் 73 ரன்களில் வெளியேறினார்.இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி179 ரன்கள் எடுத்தது.