பழிதீர்த்த இங்கிலாந்து - 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி

 
england

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 12ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், நேற்று லாட்ஸ் மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொயின் அலி 47 ரன்களும், டேவிட் வில்லே 41 ரன்களும் எடுத்தனர். 

ind vs eng

இதனையடுத்து 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறியது. கேப்டன் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமலயே டக் அவுட் ஆனார். இதேபோல் ஷிகர் தவான் 9 ரன்களிலும், ரிஷப் பந்த ரன் எதுவும் அவுட்டாகாமலும் வெளியேறினர். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட விராட் கோலி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய சூர்யகுமார் யாதவ் 27 ரன்களும், ஹர்த்திக் பாண்டியா 29 ரன்களும், முகமது ஷமி 23 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதேபோல் ஜடேஜாவும் 29 ரன்களில் வெளியேற அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி 38.5 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1க்கு1 என்ற கணக்கில் சமனிலையில் உள்ளது.