சொதப்பல் பந்துவீச்சு - இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து

 
eng

டி20 உலக கோப்பை தொடரில், இரண்டாவது அரையிறுதி போட்டியில் இன்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 168 ரன்கள் குவித்துள்ளது.  

8வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.  சூப்பர் 12 சுற்றில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. அதாவது, சூப்பர்12 சுற்றின் முடிவில் குரூப்1-ல் முதல் இரு இடங்களை பிடித்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப்2-ல் டாப்-2 இடங்களை பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான்  ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நேற்று நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் நடைபெறவுள்ள 2-வது அரைஇறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்தும் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தார். 

hardick


 
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் இறுதியில் சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் 5 ரன்களிலும், ரோகித் சர்மா 27 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 14 ரன்களில் வெளியேறினார். இந்த நிலையில், விராட் கோலியுடன் கூட்டணி அமைத்த ஹர்த்தி பாண்டியா அணியை சரிவில் இருந்து மீட்டார். விராட் கோலி 50 ரன்களில் வெளியேற, கடைசி நேரத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார் ஹர்திக் பாண்டியா. இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 63 ரன்கள் எடுத்தார். 

eng

இதை தொடர்ந்து 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களம் புகுந்த அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய பந்துவீச்சாளர்கள் எவ்வளவு முயன்றும் இவர்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த ஜோடியின் அதிரடியால் இங்கிலாந்து அணி  16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்களுடனும் (47 பந்துகள்) , ஜோஸ் பட்லர் 80 ரன்களுடனும் (49 பந்துகள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.