பதக்கங்களை குவிக்கும் இந்திய வீரர்கள் -அன்புமணி ராமதாஸ் வாழ்த்து..

 
anbumani

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற  இந்திய வீரர் ஜெரிமி லால்ரினுங்கா உள்ளிட்ட வீரர்களுக்கு  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதக்கங்களை குவிக்கும் இந்திய வீரர்கள் -அன்புமணி ராமதாஸ் வாழ்த்து..

 பர்மிங்காம் நகரில் நடைபெற்று  வரும் காமன்வெல்த் போட்டியில்  ஏற்கனவே,  ஒரு  தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது.  இந்நிலையில் தற்போது   67 கிலோ ஆடவர் எடை தூக்கும் போட்டியில் 300 கிலோ எடை தூக்கிஇந்திய வீரர் ஜெரிமி லால்ரினுங்கா  தங்கம் வென்று அசத்தியுள்ளார்.  இந்நிலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

பதக்கங்களை குவிக்கும் இந்திய வீரர்கள் -அன்புமணி ராமதாஸ் வாழ்த்து..

அந்தவகையில் பாமக நிறுவனர் ராமதாஸ்,  “பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 67 கிலோ ஆடவர் எடை தூக்கும் போட்டியில் 300 கிலோ எடை தூக்கி தங்கம் வென்ற இந்திய வீரர் ஜெரிமி லால்ரினுங்காவுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை  உரித்தாக்கிக் கொள்கிறேன். எடை தூக்கும் பிரிவில் இது இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம். மற்ற போட்டிகளிலும்  பதக்கங்களைக் குவித்து  5 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் இந்தியா  மேலும் முன்னேறுவதற்கும் எனது  வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.