காமன்வெல்த் போட்டிகள் நாளை மறுதினம் தொடக்கம் - முழு அட்டவணை

 
common wealth

காமன்வெல்த் போட்டிகள் நாளை மறுதினம் முதல் தொடங்கவுள்ள நிலையில், அதன் முழு அட்டவணை வெளியாகியுள்ளது. 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.  இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டி தொடர்பாக முழு கால அட்டவணை வெளியாகி உள்ளது. முதல் முறையாக காமன்வெல்த்தில் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. எட்ஜ்பாஸ்டனில் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன.கூடைப்பந்து போட்டிகள் ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறுகின்றன. நீச்சல் மற்றும் பாரா நீச்சல் போட்டிகளும் அதே நாட்களில் நடைபெறவுள்ளன. இதேபோல் ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை பேட்மிண்டன்போட்டிகள் நடைபெறவுள்ளன.  ஜிம்னாஸ்டிக்ஸ் ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல் தடகளம் ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெறவுள்ளது.  2002ம் ஆண்டிலிருந்து காமன்வெல்த்தில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு ஆடப்பட்டுவருகிறது. ஆனால் இந்த ஆண்டுதான் பாரா டேபிள் டென்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 8ம் தேதி நிறைவு விழா நடைபெறுகிறது.

Neeraj Chopra

இதனிடையே, ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் ஜோப்ரா காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். சமீபத்தில் நடந்த உலக தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியின் போது காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதி பெற சில நாட்கள் ஆகும் என்பதால், அவர் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.