காமன்வெல்த் : பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்..

 
Lovepreet Singh - காமன்வெல்த்

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில்   பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

22வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 77 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த காமன்வெல்த் போட்டிகள் வரும் 8ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது.  பதக்கப்பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் நீடித்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவுக்கு பளுதூக்குதல் பிரிவில் மட்டும் 5க்கும் மேற்பட்ட  பதக்கங்கள் கிடைத்துள்ளன.

Lovepreet Singh- காமன்வெல்த்

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு பதக்கம் கிடைத்திருக்கிறது.  ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியின் 109 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் வெண்கலம் வென்று அசத்தியிருக்கிறார்.  லவ்பிரீத் சிங் ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 192 கிலோ என மொத்தம் 355 கிலோ எடையை தூக்கி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

Lovepreet Singh - காமன்வெல்த்

முதல் இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி 42 தங்கம், 32 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 106 பதக்கங்களை வென்றுள்ளது.  பதக்கப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள இந்தியா   5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை பெற்றுள்ளது.   தற்போது காமன்வெல்த் பளுதூக்குதலில் 109 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் வெண்கலம் வென்றுள்ளதை அடுத்து, பதக்கங்களின் எண்ணிக்கை  14 ஆக அதிகரித்திருக்கிறது.