செஸ் ஒலிம்பியாட்- இந்திய மகளிர் அணிக்கு முதல் தோல்வி

 
ChessOlympiad

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா வீராங்கனைக்கு முதல் தோல்வி ஏற்பட்டுள்ளது.

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாடி வருகின்றனர். மூன்றாவது சுற்று இன்று தொடங்கியது. போட்டி தொடங்கப்பட்டு சில மணி நேரங்களில் இந்தியா மகளிர் அணியின் மூன்றாவது பிரிவு சார்ந்த நந்திதாவின் எதிரணி ஆஸ்திரியா வீரர் வராத காரணத்தினால் வெற்றி பெற்றதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தனர். இதேபோல் இந்திய ஓபன் 3வது  அணியில் சேதுராமன் வெற்றியடைந்தார். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய அவர் 36வது நகர்தலில் ஐஸ்லாந்து வீரரை வீழ்த்தி வெற்றி பெற்றார். 

இதனையடுத்து இந்திய மகளிர் பிரிவில் 3வது அணி வீராங்கனை வர்ஷினி களமிறங்கினார். இந்திய மகளிர் அணி சி பிரிவில் விளையாடி வந்த சாய்ஹிதி வர்ஷினி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆஸ்திரியா அணி வீராங்கனை நிக்கோலோ விடம் 46வது நகர்வில் தோல்வியடைந்தார். இந்தியா மகளிர் அணி சி பிரிவில் மொத்தம் நான்கு வீராங்கனைகள் விளையாடிவந்தது குறிப்பிடதக்கது.அதில் நந்திதா முதல் வெற்றியை பதிவு செய்தார். ஈஷா கர்வாடே போட்டியை சமன் செய்திருந்தார். தற்போது சாகித் வர்ஷினி தோல்வி அடைந்துள்ளார். பிரத்தியுஷா போடா ஆஸ்திரிய வீராங்கனை உடன் விளையாடி வருகிறார். பிரத்தியுஷா போடா வெற்றி பெற்றால் இந்திய பெண் சி அணி  வெற்றி பெறும்.