தோனியின் 'வாரிசு' - சென்னை அணி வெளியிட்டுள்ள வீடியோ வைரல்

 
dhoni

வாரிசு பட டிரெய்லரில் விஜய்யின் வசனத்துடன் தோனியை வைத்து சென்னை அணி நிர்வாகம் உருவாக்கியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை தெலுங்கு முன்னணி இயக்குனர் தில் ராஜூ இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்டில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் வருகிற 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

இந்நிலையில், வாரிசு பட டிரெய்லரில் விஜய்யின் வசனத்துடன் தோனியை வைத்து சென்னை அணி நிர்வாகம் உருவாக்கியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களால் லைக் செய்யப்பட்டுள்ள நிலையில், பலரால் பகிரப்பட்டும் வருகிறது.