செஸ் ஒலிம்பியாட்- செஸ் விளையாடி அசத்திய முதலமைச்சர்

 
செஸ்

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டபோது செஸ் விளையாடி மகிழ்ந்தார்.

செஸ்

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி  நாளை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் துவங்க உள்ளது பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் போட்டியின் துவக்க விழா நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள இந்த போட்டி குறித்து பொதுமக்களிடையே வரவேற்பும் ஆதரவும் பெரும் வண்ணம் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விழிப்புணர்வு பிரசாரத்துக்காக ஜூன் 19ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் ஜோதியானது தொடங்கி வைக்கபட்டது.

முதலில் வடமாநிலங்களில் பயணித்த  இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி பின்னர் கர்நாடகா,கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வந்தடைந்து
இந்தியவின் 75 வது நகரங்களுக்கு கடந்து  தமிழகத்திற்கு கடந்த திங்கள்கிழமை 23 ம் தேதி  கோவைக்கு  வந்தடைந்தது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பயணித்த ஜோதி நேற்று கன்னியாகுமரியிலும் இன்று காலை ஜோதி போட்டி நடைபெறும் இடமான மாமல்லபுரம் கொண்டுவரபட்டது.

இந்நிலையில் அனைத்து துறைகளின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என தமிழக முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் சர்வதேச சதுரங்க போட்டி நடைபெறும் இடத்தை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அகில இந்திய சதுரங்கத்தின் சங்கத் (AICF) தலைவர் சஞ்சய் கபூருடன் சதுரங்கம் விளையாடினார், அப்போது முதலில் சிற்பாய் காய்களை நகர்த்திய சஞ்சய் கபூரு முதலமைச்சர் எந்த காய் நகர்த்துவார் என உற்று கவனித்தார். அப்போது முதலமைச்சரும் சிப்பாய் காய்களை நகர்த்தினர். ஒரு மூன்று நகர்வர்களுக்குப் பிறகு முதலமைச்சர் முக ஸ்டாலின் சூதானமாக எதிரில் அமைந்திருந்த குதிரைக்காயை வெட்டி வெளியேற்றினார். பின்பு இருவரும் கை குலுக்கிக் கொண்டு சதுரங்க அரங்கத்தில் இருந்து வெளியேறினர்.