காமன்வெல்த் மல்யுத்தம் - பஜ்ரங் புனியா, தீபக் புனியா காலிறுதிக்கு தகுதி

 
Bajrang and deepak

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மல்யுத்தம் பிரிவில் இந்திய வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் தீபக் புனியா ஆகியோ காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். 

22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இதுவரை 7 நாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இதில் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இன்று மல்யுத்த போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் ஆண்களுக்கான ப்ரீஸ்டைல் 65 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா 4-0 என்ற கணக்கில் லோவ் பிங்காம்-யை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அதே போல ஆண்களுக்கான ப்ரீஸ்டைல் 86 கிலோஎடை பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா நியூசிலாந்தின் மேத்யூ ஆக்சன்ஹாமை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.