ஆஸ்திரேலிய ஓபன் 2023 - ரஃபேல் நடால்,டேனியல் மெட்வெடேவ் வெற்றி

 
Nadal

இன்று மார்கோஸ் ஜிரோனுக்கு எதிரான தனது முதல் சுற்று ஆட்டத்தில் மெட்வெடேவ் இரக்கமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அமெரிக்காவின் ஜிரோனை 6-0, 6-1, 6-2 இன்று செட் கணக்கில் ஊதி தள்ளினார்.


நடப்பு சாம்பியனும்,ஸ்பெயின் வீரருமான ரஃபேல் நடால் 7-5, 2-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் 21 வயதான அறிமுக வீரர் ஜாக் டிராப்பருக்கு எதிராக வெற்றி பெற்று 17வது முறையாக மெல்போர்ன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

முழங்கால் காயம் காரணமாக நிக் கிர்கியோஸ் போட்டியிலிருந்து விலகினார்.கடந்த ஆண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டியாளரான கிர்கியோஸ் முதல் சுற்றில் ரோமன் சஃபியுலினுடன் விளையாட இருந்தார் , அவருக்கு பதிலாக அதிர்ஷ்டசாலியாக டெனிஸ் குட்லா இடம் பெறுவார்.

மார்கரெட் கோர்ட் அரங்கில் நடைபெற்ற போட்டியில் பிரான்சின் குவென்டின் ஹாலிஸை 6-3 6-4 7-6(6) என்ற செட் கணக்கில் வீழ்த்தி மூன்றாம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.