ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழப்பு!

 
TN

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்  கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 46.

TN

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்  டெஸ்ட் போட்டி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி ஆல்-ரவுண்டராக கலக்கியவர். 1998 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச போட்டியில் அறிமுகமான இவர் 2003, 2007 உலக கோப்பை போட்டிகளில் பெரிய பங்களிப்பை அளித்தவர். ஆஸ்திரேலியா அணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ,  ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விளையாடி வந்தார். 

TN

இந்த சூழலில் நேற்று குயின்ஸ்லாந்து பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மறைவு கிரிக்கெட்  ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.