டி20 உலக கோப்பை - ஆப்கானிஸ்தானுக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

 
AUS vs AFG

டி20 உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 168 ரன்கள் சேர்த்துள்ளது. 

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிக்குள் நுழையும். இதுவரை நியூசிலாந்து அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

இந்த நிலையில் தொடரில் இன்று குரூப்1-ல் நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.  இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 54 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.