டி20 உலக கோப்பை தொடர் - ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

 
australia

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  

7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 12 அணிகள் இதில் விளையாடவுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேபோல் முதல் சுற்றில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகளில் தகுதி பெறும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி சுற்றுக்கு முன்னேறும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள போட்டிக்காக இப்போதே பல்வேறு நாடுகள் தங்கள் அணியை வலுப்படுத்த தொடங்கியுள்ளன. 

australia

இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டனாக ஆரோன் பிஞ்ச் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணை கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் டேவிட், வார்னர், மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ் உள்ளிட்டோரும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர்.  

ஆஸ்திரேலிய அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), பேட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), டேவிட் வார்னர், மேக்ஸ்வெல், மிச்சேல் மார்ஷ், ஸ்டீவ் சுமித், கானே ரிச்சர்ட்சன், ஸ்டார்க், ஸ்டோனிஸ், ஆஸ்டன் ஆகர், டிம் டேவிட், ஹாசல்வுட், ஜோஸ் இங்லிஸ், மேக்யூ வாடே, ஆடம் ஜம்பா, டிம் டேவிட் உள்ளிட்டோர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர்.