ஆசிய கோப்பையில் இன்று மீண்டும் மோதும் இந்தியா-பாகிஸ்தான்

 
Hardik

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் மீண்டும் மோதுகிறது. 

15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒருமுறை மோத வேண்டும். இந்த சூப்பர் 4 சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது. சார்ஜாவில் நேற்று இரவு நடைபெறவுள்ள இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 

indvspak

இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே இவ்விரு அணிகளும் மோதிய நிலையில், அந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆகையால் அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி கங்கனம் கட்டிக்கொண்டு உள்ளது. இதேபோல் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. மீண்டும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.