ஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்தியா-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

 
INDvsAFG

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு நுழைந்தது. ஏற்கனவே இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணியும் தகுதி பெற்றதால் இந்தியாவில் இறுதி சுற்று கனவு தகர்ந்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் அடுத்தடுத்து வீழ்ந்ததால் இறுதி சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது. 

ind vs zim

இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணியில் பேட்டிங் ஓரளவு நன்றாக இருந்த போதிலும், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் சீராக இல்லாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஆப்கானிஸ்தானும் ஏற்கனவே இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டதால் ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த சம்பிரதாய மோதலில் ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்கும் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 3 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி கண்டிருக்கிறது.