ஆசிய கோப்பை யாருக்கு ? : பாகிஸ்தான் - இலங்கை அணிகள் நாளை மோதல்

 
SrivsPak

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறவுள்ள இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. கடந்த 27ம் தேதி தொடங்கிய போட்டி நாளையுடன் முடிவடைகிறது. சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இலங்கை தான் மோதிய மூன்று ஆட்டங்களிலும் வென்று 6 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.  பாகிஸ்தான் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் அடுத்தடுத்து வீழ்ந்ததால் இறுதி சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது. ஆப்கானிஸ்தானும் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. 

pak vs sri

இந்நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. ஏற்கனவே நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி நாளைய போட்டியில் இலங்கைக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. இதேபோல் இலங்கை அணி நாளைய போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்ற தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை 14 ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றுள்ள நிலையில் அதில் இந்தியா 7 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளது.