மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி - ஆசிய கோப்பை 2023 அட்டவணை வெளியானது

 
ind vs pak

ஆசிய கோப்பை இந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்க உள்ள நிலையில், பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் அதில் மோதவுள்ளன.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு டி20 வடிவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசியக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வருடம் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. இதனால் 2023 ஆசியக் கோப்பைப் போட்டியும் செப்டம்பரில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா வெளியிட்டுள்ளார்.


அதன்படி ஆசிய கோப்பை 2023 இல் 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த தொடரில் மொத்தம் 13 போட்டிகள் இருக்கும். மொத்தம் 6 லீக் ஆட்டங்கள் & சூப்பர் 4 ஆட்டங்கள் நடைபெறும், அதைத் தொடர்ந்து இறுதிப் போட்டி நடைபெறும். இந்த போட்டித் தொடர் எங்கு நடைபெறும் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை 2023ஆம் ஆண்டில் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டது. இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்யாது என ஜெய் ஷா கருத்து தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், இந்த அட்டவனையானது வெளியாகியுள்ளது. எது எப்படியோ இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.