அதிரடி வீரர் அம்பத்தி ராயுடுவுக்கு இன்று பிறந்தநாள்!

 
ambati rayudu

இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் பிறந்தவர் அம்பத்தி ராயுடு. சிறு வயது முதலே கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட அம்பத்தி ராயுடு கடந்த 2004ம் ஆண்டு, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். அவர் இந்திய அணியை அரையிறுதி வரை இந்திய அணியை கூட்டிச் சென்றார். இதேபோல் அம்பத்தி ராயுடு இந்திய அணிக்காக முதல் முதலில் 2014ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிம்பாவே அணிக்கு எதிராக முதல் முதலில் களமிறங்கினார். இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்ததை அடுத்து அவர் 2019ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக இதுவரை 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அம்பத்தி ராயுடு, 1694 ரன்கள் சேர்த்துள்ளார். இதேபோல் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ராயுடு, 42 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 187 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அம்பத்தி ராயுடு, 4,187 ரன்கள் குவித்துள்ளார். 

rayudu

இந்த நிலையில், அம்பத்தி ராயுடு இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி அம்பத்தி ராயுடுவுக்கு இந்திய கிரிக்கெட் விரர்கள், சென்னை அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.