டி20 உலகக்கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

 
AFG

டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது
 
7-வது டி 20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 12 அணிகள் இதில் விளையாடவுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேபோல் முதல் சுற்றில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகளில் தகுதி பெறும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி சுற்றுக்கு முன்னேறும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள போட்டிக்காக இப்போதே பல்வேறு நாடுகள் தங்கள் அணியை வலுப்படுத்த தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட நாடுகள் தங்களது அணியை அறிவித்துள்ளன. 

AFG

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது நபி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணை கேப்டனாக நஜிபுல்லாஹ் சத்ரான் நியமிக்கப்பட்டுள்ளார்.  குயீன் ரஹ்மான், ரஷீத் கான் உள்ளிட்டோரும் ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளனர். 
 
ஆப்கானிஸ்தான் அணி : முகமது நபி (கேப்டன் ), நஜிபுல்லாஹ் சத்ரான் ( துணை கேப்டன் ), ரஹ்மானுல்லா குர்பாஸ் , அஸ்மத்துல்லா உமர்சாய், தர்வீஷ் ரசூலி, பரித் அஹ்மத் மாலிக், பசல் ஹக் பரூக்கி, ஹஸ்ரதுல்லாஹ் ஜசாய், இப்ராஹிம் சத்ரான், முஜீப் உர் ரஹ்மான், ரஹ்மத், குயீன் ரஹ்மான்,ரஷீத் கான், சலீம் சபி, உஸ்மான் கனி உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் அப்சர் ஜசாய், ஷராபுதீன் அஷ்ரப், ரஹ்மத் ஷா, குல்பாடின் நைப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.