சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு - ஆரோன் பிஞ்ச் அறிவிப்பு

 
Aron finch

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் அறிவித்துள்ளார். 

2013ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஆரோன் பிஞ்ச் முதல் முறையாக ஆஸ்திரேலியா அணிக்காக களமிறங்கினார்.  இதுவரை 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள ஆரோன் பிஞ்ச் 17 சதங்கள், 30 அரை சதங்கள் உள்பட 5,402 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது அந்த அணியின் கேப்டனாக உள்ளார். இந்நிலையில், ஆரோன் பிஞ்ச் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நாளை நடைபெற உள்ள நியூசிலாந்துடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வுபெற உள்ளேன் என தெரிவித்துள்ளார்.ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்த ஆரோன் பிஞ்ச் இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் கடைசி ஏழு போட்டிகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார்.   

Aron finch

இது தொடர்பாக ஆரோன் பிஞ்ச் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த ஒருநாள் உலகக் கோப்பைக்குத் தயாராகி வெற்றிபெற ஒரு புதிய தலைவருக்கு சிறந்த வாய்ப்பை வழங்குவதற்கான நேரம் இது என்று குறிப்பிட்டுள்ளார். சில நம்பமுடியாத நினைவுகளுடன் இது ஒரு அற்புதமான நாட்கள்.  சில புத்திசாலித்தனமான ஒரு நாள் அணிகளில் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இந்த நிலைக்கு எனது பயணத்திற்கு உதவிய மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.