செஸ் ஒலிம்பியாட்டில் கலக்கும் 8 வயது சிறுமி

 
செஸ்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரில் கலந்து கொண்ட இளம் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் பாலஸ்தீன் நாட்டை சேர்ந்த 8 வயது சிறுமியான ராண்டா சேடார்  Randa Sedar). இவர் இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

படம்

 8 வயது சிறுமி ராண்டா சேடார் பாலஸ்தீன் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் 2ஆம் இடம் பிடித்தையடுத்து, அந்த நாட்டுக்கான தேசிய அணியில் இடம் பிடித்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாட சென்னை வந்துள்ளார் ராண்டா. அவரின் தந்தை ராண்டாவுக்கு 5 வயதாகும் போது செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தினார். விரைவில், செஸ் விளையாட்டு அவருக்கு வாழ்க்கையானது. தொடர் முயற்சியின் காரணமாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாட சென்னைக்கு வந்துள்ளார் இந்த சிறுமி. முதல் சுற்றில் ஓய்வில் இருந்த இந்த இளம் புயல், பாலஸ்தீன அணிக்காக இன்று கொமோரஸ் அணிக்கு எதிராக களம் காண்கிறது.