காமன்வெல்த் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் பங்கேற்பு

 
common wealth

காமன்வெல்த் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த 8 வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் நேற்றிரவு தொடங்கின. இன்று முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.  இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், (மகளிர்), சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஆக்கி, ஜூடோ, லான் பவுல்ஸ், பாரா பவர்லிப்டிங், ஸ்குவாஷ், நீச்சல், டேபிள் டென்னிஸ், டிரையத்லான், பளு தூக்குதல், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் இந்தியர்கள் பங்கேற்கின்றனர். நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து , மீராபாய் சானு, ரவி தஹியா, மாணிக் பத்ரா, லவ்லினா, நிகத் ஜரின் உள்ளிட்டோர் பதக்கம் வெல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதில் தமிழகத்தில் இருந்து தடகள மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் 8 வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஆரோக்கிய ராஜ், நாகநாதன் பாண்டி,ராஜேஷ் ரமேஷ் ,பிரவீன் சித்திரைவேல் ,மஞ்சு பாலா சிங் ஆகியோர் தடகள போட்டியில் பங்கேற்கின்றனர். இதேபோல் சரத் கமல் ,சத்யன் ஞான சேகரன் ரீத் ஷிகா ஆகியோர் டேபிள் டென்னிஸ் போட்டிகளிலும் களம் காண இறங்குகின்றனர். 
இங்கிலாந்தில்