இலங்கைக்கு 391 ரன்கள் இலக்கு.. சதம் விலாசிய விராட் கோலி..

 
இலங்கைக்கு 391 ரன்கள் இலக்கு.. சதம் விலாசிய விராட் கோலி..

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில்  391  ரன்களை  இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.  


இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்று  வருகிறது. டாஸ் வென்று  பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும்  சுப்மன் கில் சிறப்பாக விளையாடினர். அதிரடியாக ஆரம்பித்த இவர்களது பார்ட்னர்ஷிப்பானது நீண்ட நேரம் நீடிக்க வில்லை. ரோஹித் சர்மா  42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.  இலங்கை வீரர் கருணாரத்னே வீசிய 16 வது ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார்.  இருந்தபோதிலும் களத்தில் இருந்த  சுப்மன் கில் சதம் அடித்து விலாசினார்.  மொத்தமாக அவர் 116 ரன்கள் எடுத்திருந்தார்.

ஷுப்மன் கில்

அவரையடுத்து இணைந்த  விராட் கோலி  அதிரடியான ஆட்டத்த வெளிப்படுத்தினார். சர்வதேச போட்டிகளில் விராட்கோலி அடிக்கும் 46வது சதமாக இது பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் விராட்கோலி 166 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.  50 ஓவர் முடிவில்  இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 390 ரன்கள் எடுத்திருந்தது.  இப்போது இலங்கை அணியை வெல்வதன் மூலம் இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ளனர்.