IPL- கேமரூன் கிரீன் , பதிரனா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை தூக்கிய கொல்கத்தா

 
ச் ச்

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் இன்று அபுதாபியில் தொடங்கியது.

ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக பணம் வைத்துள்ள கொல்கத்தா அணி ரூ.64 கோடியுடனும் , சென்னை அணி ரூ.43 கோடியுடனும் களமிறங்கியது. இந்தத் தொடரில் அதிக விலைக்கு செல்வார் என்று கணிக்கப்பட்ட கேமரூன் கிரீனை 25.20 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது. சென்னை அணிக்கு நட்சத்திர பந்துவீச்சாளராக இருந்த பதிரனாவை கொல்கத்தா அணி 18 கோடிக்கு வாங்கியது. மேலும் வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தஃபீஸூர் ரகுமானின் 9.20 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா. 

இம்முறை இளம் வீரர்களை நோக்கி களமிறங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீரை தலா 14.20 கோடிக்கு வாங்கியது. மேலும் மேற்கிந்தியத தீவுகளின் சுழற்பந்துவீச்சாளர் அக்கில் ஹுசைனை 2 கோடிக்கு வாங்கியது.பெங்களூரு அணியானது ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை 7 கோடிக்கு தட்டித் தூக்கியது. ஆல்ரவுண்டர் மங்கேஸ் யாதவை 5.2 கோடிக்கு வாங்கியது. மேலும் நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேக்கப் டப்பியை 2 கோடிக்கு வாங்கியது. மும்பை அணியானது தென்னாபிரிக்கா அணியின் குயின்டன்  டிகாகை 1 கோடியில் தட்டி தூக்கியது. குஜராத் அணி ஜேசன் ஹோல்டரை 7 கோடிக்கு வாங்கியது. லக்னோ அணியானது வனிது அசரங்கா மற்றும் ஆண்ட்ரிக் நார்ஜாவை தலா 2 கோடிக்கு வாங்கியது. டெல்லி அணையானது தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர ஆட்டக்காரரான டேவிட் மில்லரை 2 கோடியில் வாங்கியது. ராஜஸ்தான் அணியானது இந்திய சுழற்பந்துவீச்சாளரான ரவி பிஷ்னோயை 7.2 கோடிக்கு வாங்கியது.