கேதார் ஜாதவ் கம்பேக் – பஞ்சாப்பை நிலைகுலையை வைத்த வார்னர் படை!

 

கேதார் ஜாதவ் கம்பேக் – பஞ்சாப்பை நிலைகுலையை வைத்த வார்னர் படை!

ஐபிஎல் தொடரின் 14ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. சொல்லப்போனால் இரு அணிகளும் ஒரே நிலையில் தான் இருக்கின்றன. கடைசி இரண்டு இடங்களில் இருக்கின்றன. மூன்று போட்டிகளிலும் தோற்று ஹாட்ரிக் தோல்வி என்ற கெட்ட பெயரை ஹைதராபாத் அணி இந்த சீசனில் பெற்றிருக்கிறது. அதேபோல ராஜஸ்தானுடனான போட்டி தவிர்த்து பஞ்சாப் அடுத்த இரண்டு போட்டிகளிலும் மண்ணைக் கவ்வியது.

Image

அதனால் இன்றைய போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக இருக்கிறது. அணியின் சில மாற்றங்களை அந்த அவசியத்தை உணர்த்தியிர்க்கின்றன. பஞ்சாப் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்தது. டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஏனெனில்சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுள்ள ஆறில் ஐந்து போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்றிருக்கிறது.

பஞ்சாப் அணியில் மெரிடித், ரிச்சர்ட்ஸன் ஆகிய இருவருக்குப் பதிலாக பாபியன் ஆலனும், ஹென்ரிக்ஸும் உள்ளே வந்தனர். ஹைதராபாத் அணியில் மணிஷ் பாண்டே, அப்துல் ஷமாத், ரகுமான் ஆகியோருக்குப் பதிலாக வில்லியம்சன், சித்தார்த் கவுல், கேதார் ஜாதவ் ஆகியோர் களமிறங்கியிருக்கின்றனர். சேப்பாக்க மைதானம் எப்போதுமே ஸ்லோ ஃபிட்ச்சாகவே இருந்திருக்கிறது. அங்கு ஸ்பின் பந்து தான் எடுபடும். இதனையறிந்தே வேகப்பந்து வீச்சாளர்கள் கூட அதிக வேகத்தில் பந்தை வீசமால் இருந்தனர்.

Image

லெக் கட்டர் போட்டு கேப்டன் ராகுலை நிலைகுலைய வைத்தார் புவனேஸ்வர் குமார். ஆரம்பத்திலிருந்தே திணறிய மயங்க் அகர்வால் 25 பந்துகளில் 22 ரன்களுக்கு கவுலிடம் வீழ்ந்தார். அடுத்து வந்த பூரன் வழக்கம் போலவே இந்தப் போட்டியிலும் டக் அவுட் ஆனார். அபாயகரமான வீரரான கெயில் கூட ஹைதரபாத் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. அவரை மிரட்டிய ரஷீத் கான் எல்பிடபிள்யூ செய்தார். தீபக் கூடா எவ்வளவு முயன்றும் அவராலும் அடிக்க முடியவில்லை. அவரும் அபிஷேக் பந்தில் எல்பிடபிள்யூவில் அவுட்டானார்.

Image

விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்ததால் டெஸ்ட் போட்டி நடக்கிறதா என்ற சந்தேகம் எழ ஆரம்பித்துவிட்டது. நம்பிக்கையாக உள்ளே கொண்டுவரப்பட்ட ஹென்ரிக்ஸ் தேவையில்லாமல் கிரீஸை விட்டு வெளியே இறங்க பெயர்ஸ்டோ ஸ்டம்பிங் செய்தார். அடுத்த நம்பிக்கையான பாபியன் ஆலனும் 11 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். இதுவரை நடந்த போட்டிகளில் தமிழக வீரரான ஷாருக் கான் மட்டுமே டீசண்டாக ஆடியிருக்கிறார். வந்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

Image

ஆனால் அவராலும் ஃபினிஷிங் ரோலை இன்று செய்ய முடியவில்லை. 22 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இறுதியில் 120 ரன்களுக்கு பஞ்சாப் ஆல் அவுட்டானது. இது எளிதாக ஸ்கோராக தெரிந்தாலும் சேப்பாக்கம் மைதானத்தில் டிபெண்ட் செய்யக் கூடியதே. அதைத் தான் கடந்த போட்டிகள் நிரூபித்துள்ளன. ஒருவேளை பஞ்சாப் சிறப்பாகப் பந்துவீசினால் ஜெயிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஹைதராபாத்தில் வில்லியம்சன் உள்ளே வந்திருப்பது கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.