“எனக்கு கொஞ்சம் மெமரி லாஸ் ஆயிடுச்சி” – காயமடைந்த டு பிளெஸிஸ் ஷாக் தகவல்!

 

“எனக்கு கொஞ்சம் மெமரி லாஸ் ஆயிடுச்சி” – காயமடைந்த டு பிளெஸிஸ் ஷாக் தகவல்!

ஏப்ரல் மாதம் ஐபிஎல் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிளெஸிஸ் சொந்த நாடு திரும்பினார். இதற்குப் பிறகு அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பாகிஸ்தான் நடத்தும் பிஎஸ்எல் (Pakistan Super League) தொடரில் கலந்துகொண்டார். நேற்றைய போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் பெஷாவர் ஜால்மி அணியும் மோதின. குவெட்டா அணியில் தான் பிளெஸிஸ் இடம்பெற்றிருக்கிறார். ஆட்டத்தின் 7ஆம் ஓவரில் டேவிட் மில்லர் அடித்த பந்து ஸ்ட்ரைட் பவுண்டரியை நோக்கிச் சென்றது.

“எனக்கு கொஞ்சம் மெமரி லாஸ் ஆயிடுச்சி” – காயமடைந்த டு பிளெஸிஸ் ஷாக் தகவல்!

அந்தப் பந்தைப் ஃபீல்டிங் செய்தபோது டு பிளெஸிஸ் சக வீரர் முகமது ஹஸ்னைனுடன் மோதிக் கொண்டார். அவரது முட்டியில் மோதியதால் பிளெஸிஸுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கொஞ்ச நேரம் மயக்கம் வந்தது போல மைதானத்தில் இருந்தார். உடனடியாக மருத்துவக் குழு அவரை ட்க்-அவுட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தது. அதன்பின் அபுதாபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஓரளவு குணமடைந்த பின் ட்வீட் செய்த அவர், “என்னை வாழ்த்திய அத்தனை பேருக்கும் நன்றி. நான் மீண்டும் ஓய்வெடுத்து வருகிறேன். பலமாக மோதியதால் மூளையில் அதிர்ச்சியும் கொஞ்சமாக நினைவிழப்பும் ஏற்பட்டுள்ளது. நான் விரைவில் குணமடைந்துவிடுவேன். சீக்கிரமே களத்திற்குத் திரும்புவேன் என்று நம்பிகிறேன். அனைவருக்கும் என் அன்பை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.