• June
    25
    Tuesday

Main Area


தொடர் தோல்விகள்; தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான் பயிற்சியாளர் !!

பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விகளால் தனக்கு தற்கொலை செய்து கொள்ளும் என்ற எண்ணமே ஒரு கட்டத்தில் ஏற்பட்டதாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். 


நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முழு பலம் பொருந்திய அணிகளுள் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதில் குறிப்பாக இந்திய அணியுடனான போட்டியில் பாகிஸ்தான் அடைந்த படுதோல்வியால், அந்த அணியின் ஒவ்வொரு வீரர்களும் இன்றளவில் கடும் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர். 


இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் கடும் மன உளைச்சலால் தனக்கு தற்கொலை எண்ணமே ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை எனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமே ஏற்பட்டது. இருந்தாலும் இது வெறும் ஒரு போட்டி தான் என்பதால் என் மனதை தேற்றி கொண்டேன், எங்கள் வீரர்களிடமும் இதனை தான் அறிவுறுத்தி வருகின்றேன். மீடியா, சமூக வலைதளங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைத்து பக்கங்களில் இருந்தும் கடும் விமர்ச்சனங்கள் எழுந்து வருவதால் பாகிஸ்தான் அணியின் ஒவ்வொரு வீரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் நிம்மதியாக தூங்குவது கூட கிடையாது” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

Aarthi Tue, 06/25/2019 - 15:51
Mickey Arthur India pakistan மிக்கி ஆர்தர் ஐசிசி உலக கோப்பை 2019 விளையாட்டு

English Title

Pakistan coach Mickey Arthur says Pakistan defeat

News Order

0

Ticker

0 விண்டீஸ் அணியுடனான தொடரில் இருந்து விராட் கோஹ்லி, பும்ராஹ்விற்கு ஓய்வு !!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 
இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை ரசிகர்களை பதட்டத்திற்கு உள்ளாக்கிய நிலையில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

virat and bumrah

இந்த உலகக்கோப்பை போட்டிகள் முடிவடைந்த சில நாட்களில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் அமெரிக்காவில் நடத்தவுள்ளதாக பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு இந்த போட்டிகளிலிருந்து ஓய்வு அளிக்கப்படும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

இந்த போட்டிகளுக்கு பின்னர் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள, சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் இருவரும் களமிறங்குவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

admin Mon, 06/24/2019 - 13:47
bumrah Virat kholi westindies t20  விராட் கோஹ்லி, பும்ராஹ் ஐசிசி உலக கோப்பை 2019 விளையாட்டு

English Title

virat kholi and bumrah will take rest against west indies match

News Order

0

Ticker

0 நடுவரிடம் ஆக்ரோஷமாக சண்டையிட்ட கோலிக்கு அபராதம்- ஐசிசி 

ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் விதிகளை மீறி நடுவரிடம் நடந்து கொண்டதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு போட்டி ஊதியத்தில் 25% அபராதத்தை ஐசிசி விதித்துள்ளது. 

இந்தியா - ஆப்கான் அணிக்கு இடையிலான போட்டி நேற்று சவுதம்டன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 67 ரன்கள் அடித்தார். இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு 225 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 

இந்தியா- ஆப்கான் போட்டியின் போது மூன்றாவது ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை ஸஸாய் எதிர் கொண்டார். ஷமி வீசிய பந்து அவரது பேட்டில் பட்டது. அனைவரும் அவுட் என கத்தினர். ஆனால், நடுவர் அவுட் கொடுக்கவில்லை. உடனே, கேப்டன் விராட் கோலி ரிவிவ்யூ கேட்டார். முதலில் பந்து பேட்டில் படாமல் பேட்டில் மட்டும் பட்டு சென்றது உறுதியானது. ஆனால் பந்து வெளியே சென்றுவிட்டதாகவும் அதனால் விக்கெட் இல்லை என நடுவர் சொல்லிவிட்டார். இதைக்கேட்டு பொங்கி எழுந்த கோலி தந்து கேப்டன் பதவியை கையிலெடுத்தார். இது அவுட் தான் என நடுவரிடம் ஆக்ரோஷமாக வாதிட்டார். தனது அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அவர், நடுவரிடம் கோலி பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. 

இந்நிலையில் நேற்றைய போட்டியில் விதிகளை மீறி நடுவரிடம் நடந்து கொண்டதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு போட்டி ஊதியத்தில் 25% அபராதத்தை ஐசிசி விதித்துள்ளது.

aishwarya Sun, 06/23/2019 - 19:25
India vs Afghanistan Virat Kohli Aggressive Appealing Virat Kohli ஐசிசி உலக கோப்பை 2019 விளையாட்டு

English Title

India vs Afghanistan: Virat Kohli Fined for Aggressive Appealing

News Order

0

Ticker

1 பரபரப்பான இந்தியா ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

இன்றைய உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அணி ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்தது.

இந்தியா - ஆப்கான் அணிக்கு இடையிலான போட்டி சவுதம்டன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 67 ரன்கள் அடித்தார். இதையடுத்து 225 ரன்கள் என்ற இலக்குடன் ஆப்கான் களமிறங்கியது. ஸ்பின் பந்துவீச்சு நன்றாக ஒர்க் அவுட் ஆன நிலையிலும், இந்திய அணி கேப்டன் வேகப்பந்து வீச்சை வைத்தே பவுலிங் அட்டாக்கை தொடங்கியுள்ளார். ஷமி, பும்ரா தொடக்கத்தில் பவுலிங் செய்தனர்.

ஷமி ஓவரில், ஹஸ்ரதுல்லா சசாய் 10 ரன்களில், தனது ஆஃப் ஸ்டம்ப்பை பறிகொடுக்க, ஆப்கன் தனது முதல் விக்கெட்டை இழந்து 55 ரன்களுடன் விளையாண்டது. ஆப்கானிஸ்தான் 24 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. 46.3வது ஓவரில், ஆப்கானிஸ்தான் 200 ரன்களை எடுத்து விளையாடிவந்தது. இருப்பினும் இறுதியாக  50 ஓவர் முடிவில்  213 ரன்களை மட்டுமே ஆப்கானிஸ்தான் எடுத்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றிப்பெற்றது.

aishwarya Sat, 06/22/2019 - 23:02
ICC World Cup 2019 WorldCup INDvsAfg INDvsAFG ஐசிசி உலக கோப்பை 2019 விளையாட்டு

English Title

Worldcup IUpdate india won in INDvsAFG

News Order

1

Ticker

1 நடுவரிடம் ஆக்ரோஷமாக முறையிட்ட கோலி! அணியை விட்டுக்கொடுக்காத கேப்டன்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானுக்கு எதிரான இன்றைய போட்டியில் நடுவரிடம் விராட் கோலி விக்கெட் கேட்டு கெஞ்சுவது போன்ற முக பாவனையுடன் பேசிய வீடியோ வைரலாகிவருகிறது.

attitude of a guy whole year vs few days before the exam..#INDvAFG pic.twitter.com/8X3vVnWBi7

— Chirag (@chirag_rachchh) June 22, 2019

இந்தியா - ஆப்கான் அணிக்கு இடையிலான போட்டி சவுதம்டன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 67 ரன்கள் அடித்தார். இதையடுத்து 225 ரன்கள் என்ற இலக்குடன் ஆப்கான் விளையாடி வருகிறது. இதில், மூன்றாவது ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை ஸஸாய் எதிர் கொண்டார். ஷமி வீசிய பந்து அவரது பேடில் பட்டது. அனைவரும் அவுட் என கத்தினர். 

ஆனால், நடுவர் அவுட் கொடுக்கவில்லை. உடனே, கேப்டன் விராட் கோலி ரிவிவ்யூ கேட்டார். முதலில் பந்து பேட்டில் படாமல் பேடில் மட்டும் பட்டு சென்றது உறுதியானது. ஆனால் பந்து வெளியே சென்றுவிட்டதாக் விக்கெட் இல்லை என நடுவர் சொல்லிவிட்டார். இதைக்கேட்டு பொங்கி எழுந்த கோலி தந்து கேப்டன் பதவியை கையிலெடுத்தார். இது அவுட் தான் என நடுவரிடம் ஆக்ரோஷமாக வாதிட்டார். தனது அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அவர், நடுவரிடம் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

aishwarya Sat, 06/22/2019 - 22:41
INDvsAfg Virat Kohli worldcup 2019 ICC World Cup 2019  விராட் கோலி ஐசிசி உலக கோப்பை 2019 விளையாட்டு

English Title

Virat Kohli video viral in Facebook

News Order

0

Ticker

1 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தானுக்கு 225 ரன்கள் நிர்ணயம்!

ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்திய அணி 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 28-வது லீக் ஆட்டம்  சவுத்தாம்டனில் இன்று நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.  அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும்  ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.  இதையடுத்து விராட் கோலி, கேதார் ஜாதவ் ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர். கோலி 67 ரன்னிலும், கேதார் ஜாதவ் 52 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு 225 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

aishwarya Sat, 06/22/2019 - 19:17
INDvAFG worldcup 2019 ICC Cricket World cup INDvAFG ஐசிசி உலக கோப்பை 2019 விளையாட்டு

English Title

WorldCup Update: #INDvAFG

News Order

0

Ticker

1 முகமது ஷமி இன்; முதலில் பேட்டிங் செய்கிறது இந்தியா !!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும் ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. 

இங்கிலாந்தின் ராஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 
காயம் காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமி இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். புவனேஷ்வர் குமாரை தவிர எந்த மாற்றமும் இந்திய அணியில் செய்யப்படவில்லை. 

அதே போல் ஆஃப்கானிஸ்தான் அணியில்,நூர் அலி மற்றும் தவ்லத் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஹஜ்ரத் மற்றும் அஃப்தாப் ஆகியோர் இன்றைய போட்டிக்கான ஆஃப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

இந்திய அணி; 
கே.எல் ராகுல்,ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, விஜய் சங்கர், தோனி, ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல். 

ஆஃப்கானிஸ்தான் அணி; 
ஹசரத்துல்லாஹ் ஜாசி, குல்புதின் நபி, ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லாஹ் ஷாஹிதி, அஸ்கார் அஃப்கான், முகமது நபி, இக்ராம் அலி கில், நஜிபுல்லாஹ் ஜர்டான், ரசீத் கான், அஃப்தாப் அலம், முஜிபுர் ரஹ்மான்.

Aarthi Sat, 06/22/2019 - 15:12
Mohammed Shami world cup 2019 முகமது ஷமி ஐசிசி உலக கோப்பை 2019 விளையாட்டு

English Title

mohammed shami enters as first bat man in today match

News Order

0

Ticker

0 இங்கிலாந்தை வீழ்த்தியது இப்படித்தான், இலங்கை கேப்டன் ஓபன் டாக்!!

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இலங்கை அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் களமிறாங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் மட்டிமே எடுத்தது. 233 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இலங்கை அணியின் அபார பந்து வீச்சால் தொடக்கத்திலேயே திணறிப்போனது. இதனால் இங்கிலாந்து அணி 47 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.இலங்கை அணியின் சிறந்த பந்து வீச்சாளரான மலிங்கா 43 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனஞ்செய டிசில்லா 3 விக்கெட்டுகளும், உதனா 2 விக்கெட்டுகளும், பிரதீப் 1 விக்கெட்டும் எடுத்தனர். 

இந்த வெற்று குறித்து இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே கூறியதாவது, வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இது மாதிரியான ஆடுகளத்தில் 300 ரன்களுக்கு மேல் குவிக்க முடியாது. இதனால் 250 முதல் 275 ரன் வரை விரும்பினோம். மேத்யூசின் பேட்டிங் அபாரமாக இருந்தது.

232 ரன் எடுத்தாலும் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக செயல்பட்டு இங்கிலாந்தை கட்டுப்படுத்தினார்கள். குறிப்பாக மலிங்காவின் பந்து வீச்சு பிரமாதமாக இருந்தது. இதுவே இலங்கை அணியின் வெற்றிக்கு காரணம் என தெரிவித்தார்

Aarthi Sat, 06/22/2019 - 12:52
World Cup 2019 england vs sri lanka கேப்டன் கருணாரத்னே ஐசிசி உலக கோப்பை 2019 விளையாட்டு

English Title

sri lanka captain says about the defeat secret england

News Order

0

Ticker

0 இன்றைய போட்டியில் உலக சாதனை படைக்க இருக்கிறார் விராட் கோலி

இன்று நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடும் பொழுது இந்திய அணியின் விராட் கோலி  புதிய உலக சாதனையை படைக்க இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்திருக்கும் விராட் கோலி, பாகிஸ்தானுடனான போட்டியின் போது, அதிவேகமாக ஒரு நாள் போட்டிகளில் 11 ஆயிரன் ரன்களைக் கடந்த வீரர் என்னும் சச்சினின் சாதனையைத் தகர்த்தார். அந்த சாதனையின் ஈரம் கூட காயாத நிலையில், அடுத்தப் போட்டியிலேயே இன்னொரு சாதனையைத் தகர்க்க இருக்கிறார் விராட்.

virat

இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 104 ரன்கள் அடித்தால், புதியதொரு உலக சாதனை படைத்தவராக மிளிர்வார் விராட் கோலி. வழக்கம் போல, இந்த சாதனையும் தற்போது சச்சின் வசம் தான் இருக்கிறது. அதாவது, இன்றைய போட்டியில், கோலி 104 ரன்களைக் கடக்கும் பொழுது, சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது இந்தியர் என்று கொண்டாடப்படுவார். மட்டுமல்லாமல், குறைந்த இன்னிங்ஸில் இந்த 20,000 ரன்களை கடந்த வீரராக விராட் கோலி புதிய உலக சாதனையைப் படைப்பார்.

virat

முதல் இரண்டு இடங்களில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் லாரா ஆகிய இருவரும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் 20,000 ரன்களை தங்களது 453ஆவது இன்னிங்ஸ் விளையாடும் பொழுது தான் கடந்தார்கள். இன்றைய போட்டியில் இந்த ரன்களை கோலி கடந்தால், அவர் 416 வது இன்னிங்ஸிலேயே  20ஆயிரம் ரன்களை கடந்து புதிய உலக சாதனையை படைப்பார். விராட் கோலி இதுவரையில், 131 டெஸ்ட் போட்டிகளிலும், 222 ஒருநாள் போட்டிகளிலும் , 62 டி20 போட்டிகளிலும் விளையாடியிருகிறார். மொத்தமாக 415 இன்னிங்ஸில் விளையாடியுள்ள விராட் கோலி, ஒருநாள் போட்டியில் 11020 ரன்களையும், டெஸ்ட் போட்டியில் 6613 ரன்கள்ளையும் மற்றும் டி20 போட்டிகளில் 2263 ரன்களையும் எடுத்திருக்கிறார்.

Aarthi Sat, 06/22/2019 - 12:33
virat kohli world cup 2019 விராட் கோலி ஐசிசி உலக கோப்பை 2019 விளையாட்டு

English Title

virat kohli going to create a world record today

News Order

0

Ticker

0 
Mohsin Khan

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகிகளில் முதல் விக்கெட் காலி!

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் முதல் 20 ஓவர்களின்போதே பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸுக்கு முடிவு தெரிந்துவிட்டது. இன்னைக்கி நம்மளை விடிய விடிய‌ வெளிக்கி போறவரைக்கும் வெளுக்கப் போறாய்ங...

எங்களுக்கு காஷ்மீர்லாம் வேணாம்.... கோலிய கொடுங்க... கெஞ்சும் பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் காஷ்மீர் வேண்டாம், கோலியை மட்டும் கொடுங்கள் என பேனருடன் கெஞ்சும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Pakistani fans’ sense of humour is exceptional. Kohli is their new Kashmir. Unfortunately, they can’t get this as well. #INDvsPAK pic.twitter.com/DMlquVZKWV

— CHARLIE (@CharlieGulshan) June 17, 2019

 

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணியை முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில் சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறார். பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம், விராட் கோலியை மட்டும் கொடுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்த வாசகங்களுடன் கோரிக்கை வைக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

aishwarya Fri, 06/21/2019 - 19:37
Virat Kohli kashmir INDvsPAK Pak Cricket Fans விளையாட்டு

English Title

Did Pak Cricket Fans Say 'We Don't Want Kashmir, Give Us Virat Kohli

News Order

0

Ticker

1 
இந்திய அணி

காவி நிற ஜெர்சியில் களமிறங்க காத்திருக்கும் இந்திய அணி !!

நடப்புக் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்  வரும் 30ம் தேதி நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்சியில் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியு...இந்திய அணி

மேலும் ஒரு முக்கிய வீரருக்கு காயம்; கடுப்பில் இந்திய ரசிகர்கள் !!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான விஜய் சங்கருக்கு வலை பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வரு...


ஷிகர் தவான்,ரிஷப் பண்ட்

உலகக்கோப்பையில் இருந்து ஷிகர் தவான் விலகல்; ரிஷப் பண்ட் இன் !!

காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாத ஷிகர் தவான் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ...


பாகிஸ்தான் அணி

தடை செய்யப்படுகிறதா பாகிஸ்தான் கிரிக்கெட் அணி..? அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை முழுவதுமாக கலைக்க வேண்டும் என ரசிகர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப...விராட் கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித்

அந்த மனுஷன் வேற லெவல்; விராட் கோஹ்லியை புகழ்ந்து தள்ளிய ஸ்டீவ் ஸ்மித் !!

தன்னை கிண்டலடித்த இந்திய ரசிகர்கள் மத்தியில் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித் மனதார பாராட்டியுள்ளார். 


புவனேஷ்வர்

புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இவரை எடுங்கள்; இந்திய அணிக்கு சச்சின் அட்வைஸ் !!

காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமிக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்

2018 TopTamilNews. All rights reserved.