டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை

டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டெல்லி: டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் விமானியான யுவராஜ் தேவதியா இன்று அதிகாலை 1 மணிக்கு தனது அலுவலக காரில் ஃபரிதாபாத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். தெற்கு டெல்லி ஐ.ஐ.டி அருகே மேம்பாலத்தில் அவர் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஐந்து பைக்குகளில் 10 பேர் அவரது காரை வழிமறித்து நிறுத்தினர். இதையடுத்து யுவராஜின் கார் கண்ணாடிகளை உடைத்த கொள்ளையர் கும்பல் அவரை தாக்கியதுடன், அவரின் உடைமைகள் மற்றும் 34 ஆயிரம் அமெரிக்க டாலர் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

spicejet

அவர்கள் தப்பி செல்வதற்கு முன்பு அந்த கொள்ளைக் கும்பலில் ஒருவன் யுவராஜை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரத்தம் வழிய, வழிய அவர் கிடந்தார். இதையடுத்து யுவராஜ் தன்னுடைய செல்போன் மூலம் போலீசாரை அழைத்தார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

சமீப நாட்களாக ஐ.ஐ.டி-டெல்லி அருகே இதே முறையில் பலரிடம் கொள்ளை அடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தெற்கு டெல்லியில் உள்ள இப்பகுதி சாலையில் இரவு நேரத்தில் கார்களை குறி வைத்து இந்த கும்பல் கொள்ளையடித்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Most Popular

பக்ரித் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற ராணுவ வீரர் மாயம்… தேடுதல் பணி தீவிரம்!

பக்ரீத் பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்திற்கு சென்ற 162-வது பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மென் ஒருவர் மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன...

நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்… இதயங்களை வென்ற செயல்!

அரசாங்கம் மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதை கடைபிடிப்பதில்லை. ஆனால் சிறுவன் ஒருவன் தான் மாஸ்க் அணிந்துள்ளது மட்டுமில்லாமல் தனது மாஸ்க் அணிவித்து...

ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகையில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ராஜ்பவனில் நடைபெற இருந்த சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான...

இன்று 5,609 பேருக்கு கொரோனா… இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்சமாக 109 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 58,211 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.63 லட்சத்தைக் கடந்துள்ளது. பரிசோதனை செய்யப்படுவோர்கள் மற்றும்...