செலவினத்தை இறுக்கி பிடித்து நஷ்டத்தை குறைத்த ஸ்பைஸ்ஜெட்..

 

செலவினத்தை இறுக்கி பிடித்து நஷ்டத்தை குறைத்த ஸ்பைஸ்ஜெட்..

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் ரூ.112 கோடியை இழப்பாக சந்தித்துள்ளது.

விமான சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் ரூ.112 கோடியை இழப்பாக சந்தித்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் மிகவும் குறைவாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ரூ.462.6 கோடியை இழப்பாக சந்தித்து இருந்தது.

செலவினத்தை இறுக்கி பிடித்து நஷ்டத்தை குறைத்த ஸ்பைஸ்ஜெட்..
ஸ்பைஸ்ஜெட்

2020 செப்டம்பர் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1,305 கோடியாக குறைந்துள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.3,074 கோடி ஈட்டியிருந்தது. மேலும் கடந்த காலாண்டில் அந்நிறுவனத்தின் செலவினம் ரூ.3,536 கோடியிலிருந்து ரூ.1,418 கோடியாக குறைந்துள்ளது.

செலவினத்தை இறுக்கி பிடித்து நஷ்டத்தை குறைத்த ஸ்பைஸ்ஜெட்..
அஜய் சிங்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் நிறுவனத்தின் நிதி முடிவு குறித்து கூறுகையில், கோவிட்-19 தொடர்ந்து விமான செயல்பாடுகளுக்கு கடுமையாக சவாலாக இருந்தபோதிலும், முந்தைய காலாண்டு போலவே செப்டம்பர் காலாண்டில் நிகர இழப்பை குறைக்க முடிந்தது. இரண்டாவது காலாண்டு செயல்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இரண்டாவது காலாண்டு (செப்டம்பர் காலாண்டு) மிகவும் மந்தமாக இருக்கும், தேவை மிகக் குறைவாக இருக்கும் என்று தெரிவித்தார்.