காஷ்மீருக்காக கொக்கி போடும் மோடி… ரிவீட் அடித்த குலாம் நபி ஆசாத்!

 

காஷ்மீருக்காக கொக்கி போடும் மோடி… ரிவீட் அடித்த குலாம் நபி ஆசாத்!

காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றிய பின் கடந்தாண்டு டிசம்பரில் அங்கு மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 280 இடங்களில் 75இல் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக பாஜக அதிக இடங்களைப் பிடித்தது. குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி 115 இடங்களைப் பிடித்து ஆதிக்கம் செலுத்தியது.

காஷ்மீருக்காக கொக்கி போடும் மோடி… ரிவீட் அடித்த குலாம் நபி ஆசாத்!
காஷ்மீருக்காக கொக்கி போடும் மோடி… ரிவீட் அடித்த குலாம் நபி ஆசாத்!

யூனியன் பிரதேசமாக உருமாற்றப்பட்ட பின் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், பாஜக தனது பலத்தை அறிந்துகொள்ள தனித்துப் போட்டியிட்டது. அக்கட்சி எதிர்பார்த்த வாக்குகள் கிடைத்துவிட்டதாகவே தெரிகிறது. ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை எங்கே இருந்தாலும் தாங்கள் தான் தனிப்பெரும்பான்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆனால் அங்கு அவர்களுக்குத் திறமையான, மக்கள் எளிதில் அணுகக்கூடிய ஒரு தலைவர் இல்லையே என்ற மனக்குறை இருக்கிறது. அதற்காகத் தான் காஷ்மீர் மாநிலத்தில் ஏற்கனவே முதல்வராகச் செயல்பட்ட குலாம் நபி ஆசாத்தைக் குறிவைத்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் வைக்கும் விலை குடியரசு துணைத் தலைவர் பதவி.

காஷ்மீருக்காக கொக்கி போடும் மோடி… ரிவீட் அடித்த குலாம் நபி ஆசாத்!

குலாம் நபி ஆசாத்தைப் பொறுத்தவரையில் காஷ்மீரின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். காஷ்மீரை எந்த தருணத்திலும் விட்டுக்கொடுக்காத காஷ்மீரின் முகமாக அறியப்படுபவர். திறமையான நிர்வாகி. சாந்தமான குணாதிசயம் கொண்டவர். அதேசமயம் தான் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருப்பவர். மக்கள் முதல் எதிர்க்கட்சித் தலைவர்கள் வரை எளிதில் அணுகக்கூடியவர். இதுவே காஷ்மீரில் காலூன்ற பாஜக அவரை டார்கெட் செய்யக் காரணம்.

காஷ்மீருக்காக கொக்கி போடும் மோடி… ரிவீட் அடித்த குலாம் நபி ஆசாத்!

பிப்ரவரி 15ஆம் தேதியோடு ராஜ்யசபாவில் அவரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதற்கான பிரிவு உபச்சார நிகழ்வு இரு தினங்களுக்கு முன்பு அவையில் நடைபெற்றது. அப்போது ஆசாத்துக்கும் தனக்கும் இருக்கும் நட்பைச் சிலாகித்த பேசினார் பிரதமர் மோடி. “உங்களை நான் ஓய்வுபெற விடமாட்டேன். தொடர்ந்து உங்களிடம் ஆலோசனைகள் கேட்பேன். உங்களுக்காக என்னுடைய கதவுகள் (அதாவது பாஜகவின் கதவுகள்) எப்போதும் திறந்திருக்கும்” என ‘க்’ வைத்துப் பேசினார். இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மனுசன் உடைந்து அழுதுவிட்டார்.

காஷ்மீருக்காக கொக்கி போடும் மோடி… ரிவீட் அடித்த குலாம் நபி ஆசாத்!

அவரின் இந்தப் பேச்சு தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்ற வருடம் 23 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தலைமைக்கு எதிராகக் கடிதம் எழுதியவர்களில் ஆசாத்தும் ஒருவர். இதைக் குறிப்பிட்டும் சூசகமாகப் பிரதமர் பேசியிருந்தார். ஆசாத்தின் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தாமரையை நீக்கமற நிறையச் செய்யலாம் என்பதால் அவருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவி கொடுக்கலாம் என்று உத்தேசித்திருக்கிறார்களாம். அடுத்த ஆண்டோடு வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைவதால் இப்படியாகக் காய் நகர்த்துகிறார்கள் மோடி-ஷா இணை.

சரி பாஜகவின் யோசனைகள் இருக்கட்டும்; குலாம் நபி ஆசாத் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். இந்தப் பேச்சு அடிபட்டவுடனே ஆசாத்திடம் மைக் நீட்டப்பட்டுவிட்டது. “பாஜகவில் நான் சேரப்போவதாக வதந்தி பரப்புபவர்களுக்கு என்னைப் பற்றி தெரியாது என்று நினைக்கிறேன். காஷ்மீரில் கறுப்பு பனி பெய்யும் நாள் தான், பாஜகவிலோ அல்லது வேறு கட்சியிலோ நான் சேரும் நாள்” என்று நறுக்கென்று சொல்லி முடித்துவிட்டார்.

காஷ்மீருக்காக கொக்கி போடும் மோடி… ரிவீட் அடித்த குலாம் நபி ஆசாத்!

மேலும் அவர் கூறுகையில், “மோடிக்கும் எனக்கும் 90-களிலிருந்தே பழக்கம். இருவரும் பொதுச் செயலாளர்களாக இருந்தபோது, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போம். சண்டையிட்டுக் கொள்வோம். இருவரும் முதல்வர்களாக இருந்த போதும் பழக்கம் ஏற்பட்டது. பிரதமருடனான கூட்டங்களில் சந்தித்திருக்கிறோம். பின்னர் நான் சுகாதார அமைச்சராக இருந்தேன். அவர் முதல்வராக தொடர்ந்தார்.

காஷ்மீருக்காக கொக்கி போடும் மோடி… ரிவீட் அடித்த குலாம் நபி ஆசாத்!

அப்போது இரு வாரங்களுக்கு ஒரு முறை பல்வேறு விஷயங்கள் பற்றி பேசுவோம். பிரிவு உபச்சாரத்தின்போது ஒருவரையொருவர் அறிந்திருந்ததால் அழவில்லை. 2006ஆம் ஆண்டு காஷ்மீரில் குஜராத் சுற்றுலா பேருந்து தாக்கப்பட்டது. அது பற்றி அப்போது மோடியிடம் பேசும்போது நிலைகுலைந்து போனேன். அந்தக் கதையைக் குறிப்பிடும்போது தான் மோடி உடைந்து அழுதார். அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்ததால் என்னாலும் அந்தக் கதையை முழுமையாக முடிக்க முடியவில்லை” என்றார். ராஜ்யசபாவில் நான் ஒரு இந்திய முஸ்லீமாக இருப்பதில் பெருமைகொள்கிறேன் என்றார் ஆசாத். அவரின் தேசப்பற்று போற்றுதலுக்குரியது. காங்கிரஸின் தவிர்க்கமுடியாத ஆளுமை நிச்சயம் பாஜக பக்கம் சாய மாட்டார் என்பதே அவரின் பேச்சுகள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.